கோவை: உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை : உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உக்கடம் ஸ்லாட்டர் ஹவுஸ் அருகில் கருமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "இப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் அருகே உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். எங்களுக்கு தற்போது மலுமிச்சம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆண்டு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் போக்குவரத்து சிரமம் உள்ளதால், முழு ஆண்டு தேர்வு வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்.