கோவை : டி.எஸ்.பி விஷ்ணுபிரியா உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற சி.பி.ஐ அறிக்கைக்கு எதிராக, விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட ஆட்சேபனை மனு மீது எதிர்வாதம் நடத்த, வருகின்ற 15-ம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்த வழக்கில் யாரும் குற்றவாளிகள் இல்லை எனவும், இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். மேலும், விஷ்ணுபிரியாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், நீதிமன்றம் உத்தரவின் படி காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் சந்திரகலா, துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட 7 பேரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் இந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தாமல், சி.பி.ஐ விசாரணையை முடித்துள்ளது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும், சி.பி.ஐ தரப்பில் எதிர்வாதம் செய்ய வேண்டிய நிலையில், அந்த தரப்பு அவகாசம் கோரியது. தொடர்ந்து, வருகின்ற 15-ம் தேதி எதிர்வாதம் நடத்த உத்தரவிட்ட நீதிபதி நடராசன், அதற்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.