பணத்திற்காக வயதான தம்பதியினர் கொலை: ஆந்திராவில் பதுங்கியிருந்த கொலையாளிகளை கைது செய்த திருப்பூர் போலீசார்

திருப்பூர்: திருப்பூரில் வயதான தம்பதியை நகை பணத்திற்காக கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்திலிருந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் வயதான தம்பதியை நகை பணத்திற்காக கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ஆந்திரா மாநிலத்திலிருந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் பகுதிக்குட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்த வயதான தம்பதிகளான முத்துக்குமாரசாமி மற்றும் தெய்வாத்தாள் ஆகியோரை கொலை செய்து அவர்களிடமிருந்த 6 பவுன் தாலிச்செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.



இந்நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வயதான தம்பதிகளின் வீட்டருகே வசித்து வந்த சித்திரை ராஜா என்பவர், அந்த தம்பதியினரிடம் பணம், நகை இருப்பதாக அறிந்து, தனது நண்பரான சுயம்புலிங்கத்திற்கு தகவல் அளித்து இருவரும் சேர்ந்து அவர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் கொலைக்கு பின் தப்பியோடிய அவர்களை அவிநாசிபாளையம் காவல்துறையினர் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுயம்புலிங்கம் மீது ஏற்கனவே காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...