கோவையில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு : களமிறங்கும் என்.ஐ.ஏ

கோவை : கோவையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன்சம்பத் மற்றும் சக்திசேனா தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 7 பேர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அமைப்பினரால் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன்சம்பத் மற்றும் சக்திசேனா தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக 7 பேர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அமைப்பினரால் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி சென்னையை சேர்ந்த இஸ்மாயில், சலாவூதீன், ஜாபர்சித்திக், சம்சூதீன் மற்றும் கோவையை சேர்ந்த ஆசிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர், பைசல் என்ற இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர்கள் 7 பேர் மீதும் யு.ஏ.பி.ஏ எனப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தனியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அர்ஜூன்சம்பத் மற்றும் அன்புமாரி போன்ற இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்ய சில மதவாத அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாவது வழக்காக இந்த வழக்கையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கையில் எடுத்துள்ளனர்.

இதற்காக கோவையில் தற்காலிக அலுவலகம் ஒன்றையும் அமைத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்து அமைப்பினர் தொடர்ந்து குறிவைக்கப்படுவது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...