கோவை: பணி நிறைவு பெரும் நாளில் அலுவலக உதவியாளரை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்ட சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் வணிகவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 34 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர் வி.முருகானந்தம். இவர் சிங்காநல்லூரையடுத்த வெள்ளலூரில் குடியிருந்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு கௌதம், பிரசாத், ஹரிஸ் என்கிற மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த 1983-ல் வணிக வரித்துறை செயலாக்கப்பிரிவில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வீட்டிற்கு சென்று அழைத்து வருவது, உள்ளிட்ட பணிகளை இவர் தனது பணிக்காலம் முழுவதும் செய்து வந்தார்.
அதிகாரிகளின் உத்தரவையேற்று அதனை திறம்பட செயலாற்றுவதும், அனைத்து ஊழியர்களிடமும் பழகும் விதம் மூலம் அனைவரின் அன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். இந்நிலையில், முருகானந்தம் இன்று பணி ஓய்வு பெற்றார். இவரின் சேவையை கௌரவிக்கும் விதமாக வணிகவரித்துறை செயலாக்க இனை ஆணையாளர் சிவராசு ஐ.ஏ.எஸ், முருகானந்தத்தை காலை வெள்ளலூரில் உள்ள முருகானந்தம் வீட்டிற்கே நேரில் சென்று காரில் அழைத்து வந்தார்.
பின்னர் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டு மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவராசுவே காரின் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டார். அலுவலகத்தின் கடை நிலை ஊழியரின் சேவையை கவுரவிக்கும் விதமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவராசுவின் நடவடிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.