தற்போதைய அரசுக்கு இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னம் வழங்கக்கூடாது: முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி

கோவை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரின் கையெழுத்திற்கு, இரட்டை இலை சின்னத்தை வரும் இடைத்தேர்தல்களில் வழங்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரின் கையெழுத்திற்கு, இரட்டை இலை சின்னத்தை வரும் இடைத்தேர்தல்களில் வழங்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது வரும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆகியோருக்கு வழங்க முடியுமா? என்ற கேள்வி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் எழுந்துள்ளது.

இரட்டை இலை

மேலும், தேர்தல் ஆணையம் இன்று வழங்கிய உத்தரவு தெளிவற்ற நிலையில் உள்ளது. இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆகியோருக்கு கிடைக்குமா? என்ன கேள்வி எழுந்துள்ளது. தற்போது அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் உடன் இருக்கும் 5,000 பேர் மட்டுமே திருப்தியாக இருக்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் யாரும் திருப்தியாக இல்லை.

கட்சி ஆட்சியை நடத்தாமல், ஆட்சி தற்போது கட்சியை நடத்துகிறது. கிளை அளவில் உள்ள செயலாளர்களும், தொண்டர்களும் இப்போது பொறுப்பில் இருப்பவர்களை ஏற்கவில்லை. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகிய இருவர் கையெழுத்திற்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். 

பலவீனம்

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் நான் கேட்கவில்லை. கட்சியை பலவீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிர்க்கிறேன். 

ரஜினி ஒரு அணியாகவும், தி.மு.க ஒரு அணியாகவும் போட்டி என சொல்வதை ஏற்க முடியாது. தி.மு.க., அ.தி.மு.க மட்டுமே தனி தனி அணிகளாக போட்டி களத்தில் இருக்கும். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பதவி பறிபோன 18 எம்.எல்.ஏ.,க்களை இன்னமும் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கவில்லை என தெரிவித்து, அவர்களை கட்சிக்கு வாருங்கள் என அழைப்பது காமெடியான அறிவிப்பு. கட்சியில் இருந்து 3,000 பேரை நீக்கியது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்., தான்.

நான் இப்போதும் அ.தி.மு.க.,காரன் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்கு தலைவர். சசிகலா, உள்ளிட்ட என யார் வேண்டுமானாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை தலைவராக ஏற்கத் தயார்.

தினகரனுக்கு பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தகுதியில்லை. 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும். தேசிய கட்சியோ, நடிகரோ இந்த கட்சியை தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கின்றது.

ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...