நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேவர்சோலை பேரூராட்சி சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 682 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.14,32,20,000 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் ஜென்மம் தொடர்பான நிலங்களில் பல்வேறு இடையுறுகள் இருந்தன. தமிழக அரசின் சீரிய மற்றும் தொடர் முயற்சியால் பழங்குடியின மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்வதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணையிடப்பட்டது.
அதனடிப்படையில் இன்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 659 பழங்குடியின பயனாளிகளுக்கும், 23 ஆதிதிராவிட பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 682 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் 340 பழங்குடியின பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணையும், ஜென்மம் செக்சன் 17 பகுதியில் வசிக்கும் 651 பழங்குடியின பயனாளிகளின் வீடுகளுக்கு தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விலையில்லா மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் அதிகமாக 1,300 பழங்குடியின பயனாளிகளுக்கு வன உரிமைகள் ஆணையும், 88 பழங்குடியின பயனாளிகளுக்கு வனப்பகுதியில் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. பண்டைய பழங்குடியினர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைவதற்காக கோழி பண்ணை, விலையில்லா ஆடு, மாடு வழங்குதல், தேனீ வளர்த்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யானை மனித மோதலைத் தடுக்க பொதுமக்கள் நடமாடும் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி ஒரு மாதத்திற்குள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கு மத்திய, மாநில அரசின் வீடு கட்டுவதற்கான திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் வீடுகட்டி தர அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து வருகிறது. எனவே பழங்குடியின பயனாளிகள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம் தலைவர் மில்லர், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சுப்ரமணியம், தேவர்சோலா பேரூராட்சி செயல் அலுவலர் குணாளன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.