கோவை: கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் காசாளரே பணத்தை திருடி சென்று கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி வருவதையொட்டி கோவையில் வியாபாரம் களை கட்டி வருகிறது. துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என எங்கு திரும்பினாலும் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல வியாபாரங்களும் கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து சூடுபிடித்துள்ளது.
இந்தநிலையில், ஒப்பணக்கார வீதியில் இயங்கிவரும் சென்னை சில்க்ஸில் பாண்டியராஜன் என்பவர் காசாளராக வேலை செய்து வந்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த கடையில் பணியாளராக வேலை செய்து சமீபத்தில் தான் காசாளராக பதவி உயர்வு பெற்றார்.
இப்படியிருக்க கடையிலிருந்த ரூ.4 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கத்தை பாண்டியராஜன் திருடிச் சென்றார். பின்னர் கணக்கில் நான்கு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் குறைவதை கண்டு கடையின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீண்டும் கணக்குகளை சரி பார்த்ததில் பணம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்தநிலையில் காசாளர் பாண்டியராஜனும் தலைமறைவாகி இருந்தார். இதில் சந்தேகம் அடைந்த கடையின் நிர்வாகிகள் பெரியகடை வீதி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாண்டியராஜனை கைது செய்து அவரிடமிருந்த திருட்டுப் பணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர்.