திருப்பூர்: தமிழகம் முழுவதும் வெவ்வேறு விதமான காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வரும் இந்த நிலையில், பல மாவட்டங்களுள் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஆண்கள் 38 பேர், பெண்கள் 28 பேர் மற்றும் குழந்தைகள் 49 பேர் என மொத்தம் 115 பேர் சிறப்பு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் சோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 115 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
தரையில் வைத்தியம்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இட வசதி பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கை வலுத்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இப்பொழுது அரசு மருத்துவமனையில் அந்த பிரிவு தான் காய்ச்சல் பிரிவாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் ஒரே படுக்கையில் இருவர் சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலை மற்றும் பெண்களை தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு அதிகமானால் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வரக்கூடிய நிலையில், தற்போது முதற்கட்ட சிகிச்சைக்கு கூட போதிய இடவசதி இல்லாமல் ஒரு படுக்கைக்கு இருவரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார துறை இணை இயக்குனர் கோமதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் நமது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலை மாற, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.