இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பிறந்து இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் போன்ற அந்தத்துக்களையும் பெற்றவர் இவர்.

இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இந்த சூழலில், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு சிலை திறக்கப்பட்டுள்ளது. ரூ.3000 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலை என்று போற்றப்படுகிறது.
பெருமைகளைத் தாங்கி நிற்கும் இந்த சிலையில், பல்வேறு மொழிகளில் 'The statue of Unity' (ஒற்றுமையின் சிலை) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த வாசகம் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு 'ஸ்டேட்டுக்கே ஒப்பி யுனிட்டி' என்று அச்சிடப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழார்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், அது போலியான புகைப்படம் என்றும், சிலர் வதந்தியை பரப்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இது போலியான புகைப்படம். உண்மையான பலகையில் இந்திய அரசின் திட்டம் என்றும், முத்திரையுடனும் இருக்கும்." என்றனர்.