நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரி மற்றும் திம்பட்டி இடையேயான நடைபாதையை மறைத்து நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி அருகே கன்னேரிக்கு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைதுறையினர் தடுப்புச்சுவர் அமைத்தனர். அப்போது, கன்னேரியில் இருந்து திம்பட்டிக்குச் செல்லும் நடைபாதை அடைக்கப்பட்டது. இதுகுறித்து இரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சார்பில் பல்வேறு புகார் மனுக்கள் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையிடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், திம்பட்டி மற்றும் தேயிலைத் தோட்டத்திற்கு செல்ல 2 கி.மீ. சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேரவிரயம், அலைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடைபாதையை மீண்டும் திறக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்பு, கோத்தகிரி வட்டாட்சியர், பேரூராட்சி செயலாளர், நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்களிடம் பேசி ஒரு வாரத்திற்குள் சாலையை சரி செய்து நடவடிக்கை எடுக்குமாறு உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.