கோவை: கோவை இருந்து சேலம் வரை செல்லும் இந்த சொகுசு பேருந்து கடந்த 2006-ம் ஆண்டு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது பள்ளி மாணவர் மீது மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக அந்த மாணவரின் தாயார் ராமாத்தாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2007-ல் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 1.62 லட்சம் ரூபாயுடன் வட்டியுடன் சேர்த்து 3 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு பேருந்து சார்பில் வழங்காமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து இன்று பேருந்து கோவை காந்திபுரத்தில் வைத்து ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் சார்பில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில்குமார் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தெரிவித்தனர்.