திருப்பூர் : தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 3-வது நாளாக கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டு மொத்த தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்ட ரீதியான குடும்ப ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களது கோரிக்கைகளை தொடர்பாக தமிழக அரசு பிரதிநிதிகளுடன், சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்தவித முடிவும் எட்டப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் - பல்லடம் சாலையில் இன்று 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால், திருப்பூர் - பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.