மதுரை : திருச்சி சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற மசினி யானையை தெப்பக்காடு முகாமிற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு மசினி என்ற பெண் யானை வழங்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த யானை, கடந்த மே மாதம் 25-ம் தேதி பாகன் கஜேந்திரன் என்பவரை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, யானைகள் புனர்வாழ்வு மையத்திற்கு மசினியை அனுப்பி வைக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மசினி யானையை தெப்பக்காடு முகாமிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டது. மேலும், மசினியை தொடர்ந்து கண்காணித்து, அதன் நிலை குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்க ஆணையிட்டனர். இதைத் தொடர்ந்து, விரைவில் மசினி தெப்பக்காடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.