திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் மொத்தம் 115 பேர் காய்ச்சல் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதால் ஒரு படுக்கையில் இருவரை படுக்க வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் மருத்துவமனை வந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இட வசதி பற்றாக்குறை என கோரிக்கை வலுத்த நிலையில், கடந்தாண்டு 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும் தற்போது போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் ஒரே படுக்கையில் இருவர் சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பு அதிகமானால் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது முதற்கட்ட சிகிச்சைக்கு கூட போதிய இட வசதி இல்லாமல் ஒரு படுக்கைக்கு இருவர் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தநிலை மாற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.