கோவை: ரூபாய் 41 கோடியில் கட்டப்பட்ட காரமடை ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கோவை முதல் மேட்டுப்பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே காரமடையில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.
ரூபாய் 41 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் நடைபாதை போன்றவற்றுக்கு தேவையான நில ஆர்ஜிதம் மற்றும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக பாலப்பணிகள் கூடுதலாக இரண்டாண்டுகள் தாமதமாகியது.
இதன் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பாலம் திறக்கப்படாததால் மாற்றுப் பாதையில் சென்ற வாகனங்களின் பயண தூரம் அதிகரித்தது.
இந்நிலையில், தற்போது ரயில்வே பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பாலத்தை தமிழக தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திறக்கப்பட்ட புதிய மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.