டெல்லி : ரபேல் விமானங்களின் விலை, ஒப்பந்தம் தொடர்பான முக்கிய விபரங்களை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் பிஷாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 10 நாட்களில் விபரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- ரபேல் போர் விமான விலை தொடர்பான விபரங்களையும், ஒப்பந்தம் தொடர்பான விபரங்களையும் சீலிட்ட கவரில் 10 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட விபரங்களையும் பொது இணைய தளத்தில் வெளியிட வேண்டும். மனுதாரர்களுக்கும் ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை அளிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.