கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை: கணபதி பகுதியில் வசித்துவரும் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை : கணபதி பகுதியில் வசித்துவரும் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கணபதி அருகே வசித்து வருபவர் ஜோசப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித்தொழிலாளியான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் இருந்த ஆறு வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது.



இதையடுத்து மாயமான குழந்தை அப்துல் ஜாபர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. மேலும், குழந்தைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தந்தை அக்கம் பக்கத்தினரிடம் கூறியதும் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அப்துல் ஜாபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்துல் ஜாபரிடம் இதுகுறித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டனர். மேலும், அக்குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையிலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறிய புகாரின் அடிப்படையிலும் அப்துல் ஜாபரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 



இப்பகுதியில் இதே போன்று பல்வேறு குழந்தைகளிடம் அப்துல் ஜாபர் தவறாக நடக்க முயற்சிப்பதை அப்போது பொது மக்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் நள்ளிரவு ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காவல்துறையிடம் இதுகுறித்து கேட்டபொழுது, "அக்குழந்தைக்கு எந்தவிதமான அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், அப்பகுதியில் உள்ள பெரியோர்களின் அறிவுறுத்தலால் குற்றவாளி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்." என்றும் தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...