கோவை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, கோவையில் இருக்கும் கொடிசியா உள்ளிட்ட தொழிற்சாலை கூட்டமைப்பினருடன் தொழிற்சாலைகளுக்கான ஆணையர் சந்தித்து பேசினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தொழிற்சாலைகளுக்கான ஆணையர் ராஜேந்திர குமார், கோவையில் இருக்கும் கொடிசியா, டி.ஏ.சி.டி., சி.ஓ.டபுள்யூ.எம்.ஏ., மற்றும் சைமா உள்ளிட்ட தொழிற்சாலை கூட்டமைப்பினரை சந்தித்து பேசினார்.
அப்போது, "கோவையில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய தீர்மானமாகும். கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ. 30,000 கோடி முதலீட்டை ஈர்க்க வேண்டும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது. மேலும், தங்களது தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகளும், குறைகளும் தமிழக அரசிடம் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. இயந்திரங்களை வாங்கும் சிறு நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரையில் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, வெறும் ரூ. 25 லட்சம் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, கோவை பிராந்தியத்தில் சிறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என டி.ஏ.சி.டி., சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் மட்டும் 30,000 சிறு தொழில்நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தொழில்துறைக்கென தனி எஸ்டேட் அமைக்கப்பட்டால், சிறு தொழில்நிறுவனங்கள் மிகவும் பயனடையும்," என்றார் டி.ஏ.சி.டி.,யின் தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு உதவும் வகையில் ஒற்றைசாளர முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சாலைகளுக்கான ஆணையர் ராஜேந்திர குமார் உறுதியளித்தார்.