தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு : எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்பது பற்றி தெரியுமா..?

சென்னை : தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒருமணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது.


சென்னை : தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒருமணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

மாசுபாட்டை தடுக்கும் வகையில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஆனால், தென் மாநிலங்களுக்கு முக்கிய சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது, காலையில் வெடிப்பதா..?, மாலையில் வெடிப்பதா..?, இரவில் வெடிப்பதா..? என்று முடிவு செய்து கொள்ள முடியும். இரவில் ஒரு மணி நேரம் பகலில் ஒரு மணி நேரம் என்று மாற்றி மாற்றி வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தந்த தென்மாநில அரசுகள் இதற்கான அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...