கோவை : தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கோவையில் கருப்பு உடை அணிந்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சத்துணவு திட்டத்திற்கான தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். மேலும், விலைவாசிக்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும். உணவு செலவீட்டுத் தொகையினை ரூ. 5 ஆக உயர்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குப் பிறதுறை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் 9 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு மற்றும் சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், தலைமை மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் மாநில தலைவர் கு.பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் வெங்கிட்டான், மாவட்ட இணை செயலாளர் சாரதாமணி, தமிழ்நாடு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அருளானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.