கோவை : கோவையில் தீபாவளிப் பண்டிகையின் டிரெண்டில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகைப் பட்டறை தொழிலாளி 'டெங்கு கொசு போன்ற தோற்றமுடைய வெடி'யை உருவாக்கியிருப்பது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா அவ்வப்போது பல்வேறு வகையான சிற்பங்கள் செய்வது வழக்கம். ஜல்லிக்கட்டை வலியுறுத்தி 100 மி.கி. தங்கத்தால் ஆன சிறிய காளை, தலைக்கவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் வகையில், விநாயகர் கடவுள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்வது போலவும், எம்.ஜி.ஆர். 100 மற்றும் கருணாநிதி உருவம் பொறித்த மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் செய்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்களுக்கு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அணுகுண்டு வடிவில் ஒரு பெரிய கொசு வடிவிலான பட்டாசை உருவாக்கி உள்ளார். சாட்டை பட்டாசு, அணுகுண்டு, மத்தாப்பு ஆகியவை கொண்டு இந்த உருவத்தை வடிவமைத்துள்ளார்.
இதனை கொளுத்தினால் வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், டெங்குவை ஒழிக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதனை தயார் செய்ததாக யு.எம்.டி.ராஜா தெரிவித்தார். இதனை தயார் செய்ய 3 நாட்கள் ஆனதாகவும், டெங்குவை ஒழிப்போம், சுகாதாரமான தீபாவளியை கொண்டாடுவோம் என அவர் கூறினார்.