கோவை : கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் அருகே வர்த்தக கட்டிடத்தின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நகைப்பட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.புரம் சாலையில் உள்ள ஒரு வர்த்தக கட்டிடத்தில் காவலாளியாக பொன்ராஜ் (65) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த ஜனவரி 7-ம் தேதியன்று இரவு பணியில் இருந்த போது ஒருவர் மதுபாட்டிலுடன் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். இதனை தடுத்து பொன்ராஜை அந்த ஆசாமி கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வெங்களூருவை சேர்ந்த கண்ணதாசன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கோவையில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கண்ணதாசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கண்ணதாசன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.