கோவை : கோவை மாவட்டம் அன்னூரில் அரிசி கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

அன்னூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி சவரன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது. இது தொடர்பாக சி.சி.டி.வி., காட்சிகளை பார்த்ததில், அன்னூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலரின் உருவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விஜயகுமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது :- அன்னூர் பகுதியில் நான் அரிசி கடை நடத்தி வருகிறேன். எனது கடையில் கடந்த 2.4.2018 அன்று திருட்டு நடைபெற்றது. அதில், பணம் மற்றும் நகைகள் களவு போனது. இதுதொடர்பாக, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்து வந்த ஒரு ஆசாமி திருடுவது பதிவாகி இருந்தது. அதனை சீடியாக தயார் செய்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். புகாரைப் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. புகாரை பெற்று அதற்கான ரசீதையும் தரவில்லை.
மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஒரு போலீஸ்காரர் போல் உள்ளது என்று தெரிவித்து இருந்தேன். ஆனால், வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக, ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தேன். பின்னர், இந்த மனு மீதான விவரம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆன்லைன் மூலம் பார்த்தபோது அங்கு போலீசார் தவறான தகவலை தெரிவித்து இருந்தனர். எனவே, கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அன்னூர் போலீசாருக்கு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், கண்காணிப்பு கேமராவில் குற்றவாளியின் உருவம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவரா என்றும், அதனை உறுதி செய்ய விசாரணை செய்ய வேண்டும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.