கோவை : ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வில் பங்கேற்கும் சிறப்பாசிரியர்களுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சருக்கு கலை ஆசிரியர்களின் நலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வுத்துறை இயக்குநரின் அறிக்கையில் தனித்தேர்வர்கள் தமிழ் மொழியில் படித்தார்கள் என்று உறுதிப்பட கூற முடியாது எனவும், பயிற்சி வகுப்பு எதுவும் அரசு தொழில்நுட்பத் தேர்விற்கு நடத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு சிறப்பாசிரியர் பணியிடத்திற்கு முக்கிய ஆதாரமான அரசு தொழில்நுட்பத் தேர்வு தான் முதல் தொழிற்கல்வி தகுதி என அரசாணை உள்ள நிலையில், தமிழ்வழி முக்கியத்துவம் பற்றி தேர்வுத்துறையின் விளக்கம் தனியார் பயிற்சி மையங்களை அரசு தேர்வுத்துறையே ஊக்குவிப்பது போல தோன்றுகிறது.
அரசு தொழில்நுட்பத்தேர்வு குறிப்பிணையில் நிலை மற்றும் மொழி என்று பக்கம் ஐந்தில் Medium- Tamil or English என கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கூறிவிட்டு தமிழில் தேர்வு எழுதினார்களா..? இந்த தனித்தேர்வகள் என்று தெரியாது என தேர்வுத்துறை இயக்குநர் அறிக்கை தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
அரசு தொழில்நுட்பத் தேர்வு ஓவிய தேர்வருக்கு தேர்வுத்துறை வழங்கிய தேர்வு அறை நுழைவுச் சீட்டில் தேர்வு எழும் மொழி தமிழ் என்று உள்ளதை தேர்வுத்துறை இயக்குநர் பார்வைக்கு எடுத்து வைக்கிறோம்.
கடந்த 2014-ம் ஆண்டு விவசாயம் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, முந்தைய கால அரசு தொழில்நுட்பத் தேர்வு விண்ணப்பங்கள் மற்றும் 2007, 2010-ம் ஆண்டு தொழில்நுட்பத் தேர்வு விடைத்தாள் போன்றவற்றில் தேர்வு எழுதும் தொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பதை, தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து முன்வைக்கிறோம்.
எனவே, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வில் பங்கேற்கும் சிறப்பாசிரியர்களுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறையை தளர்த்த தேர்வுத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது