தகாத உறவால் கோத்தகிரியில் பெண் கழுத்து அறுத்து கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நீலகிரி : இரு தினங்களுக்கு முன்பு கோத்தகிரியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி : இரு தினங்களுக்கு முன்பு கோத்தகிரியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாகவே கொலை நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கோத்தகிரியை சேர்ந்த லோகேஸ்வரி என திருமணம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார். தற்போது, ராஜேஷ்குமார் சவுதியில் பணி புரிந்து வந்தார். இதனால், லோகேஸ்வரியும், மகன் கார்த்திகேயனும் கோத்தகிரியில் உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் லோகேஸ்வரியின் பெற்றோர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இரவு லோகேஸ்வரியை பார்க்க அவரது பெற்றோர் வந்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருப்பதைக் கண்ட அவர்கள் சந்தேகமடைந்து பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது, லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், பேரன் கார்த்திகேயன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுகுறித்து உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோத்தகிரி போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியாவின் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இதனிடையே, கொலை நடைபெற்ற வீட்டின் அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கிளையாக லோகேஸ்வரியின் செல்போன் உரையாடல்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், கொலை செய்யபட்ட பெண்ணுக்கு பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததும், போட்டியின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கொலை நடந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி, அதன்மூலம் கொலையாளியை தேடியும், லோகேஸ்வரி இறப்பதற்கு முன் பேசிய செல்போன் எண்களை வைத்தும் தேடிய போது, ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கௌரி சங்கர் (27) என்பவர் சிக்கினார். இவரை விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லோகேஸ்வரி ஹெர்பால், ஆம்வே போன்ற அழகு சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். தன்னை பேரழகி என்ற நினைப்பிலேயே சுற்றியுள்ளார். எப்போதும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார்.

இதனால், வாட்ஸ் அப்,பேஸ்புக்கில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். கணவன் வெளிநாட்டில் இருந்ததால், பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அதேபோல் தான் கௌரிசங்கர் என்பவரிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

கௌரி சங்கர் ‘ஆம்வே’அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். மாதாந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். ஆம்வே விற்பனையில், லோகேஸ்வரிக்கு கௌரி சங்கர் உதவி செய்துள்ளார். இதனால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதன்மூலம் இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கௌரி சங்கர் தாலி செயின் போட்டு ஏறக்குறைய கணவன், மனைவியாக நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கௌரி சங்கர் போனில் தொடர்பு கொண்ட போது லோகேஸ்வரி பேச மறுத்துள்ளார். பேசாததற்கான காரணத்தை ஆராய்ந்ததில் பல ஆண்களிடம் லோகேஸ்வரி தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. 

பலமுறை எடுத்து சொல்லியும் கேட்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த கௌரி சங்கர் கடந்த ஞாயிறன்று கோத்தகிரி வந்து லோகேஸ்வரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், கோபமடைந்த தகாத உறவு காதலன் கௌரி சங்கர் கத்தி எடுத்து லோகேஸ்வரியின் கழுத்தினை அறுத்து கொலை செய்துள்ளார். எங்கே குழந்தை காட்டி கொடுத்து விடுமோ என்ற பயத்தில் பிஞ்சு குழந்தையும் கொடூரமாக கழுத்தை அறுத்துள்ளார். பின்னர், கொலையை திசை திருப்ப நகை மற்றும் செல்போனை திருடி சென்றுள்ளார். அவரை கைது செய்த தனிப்படை காவல் துறையினர் திருப்பூர் மற்றும் ஈரோட்டிற்கு அழைத்து சென்று விற்ற நகையை கைப்பற்றியுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...