கோவை : கடந்த 1991 ஆம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி வீரசிவா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பிலால் ஹாஜியார் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவையில் 1991-ம் ஆண்டு இந்து முன்னணி நிர்வாகியான வீரசிவா என்பவரை கொலை செய்த வழக்கில், தற்போது 86 வயதான பிலால் ஹாஜியார் என்பவர் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், வயது முதிர்வை காரணம் காட்டி, பிலால் ஹாஜியார் ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிலால் ஹாஜியாரின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, கோவை நீதிமன்றத்தில் அவரை ஆஜராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிலால் ஹாஜியார் கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இவருக்கு 86 வயதாவதால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும், நடக்கக்கூட முடியாததால் சிறையில் அடைக்கக்கூடாது என பிலால் ஹாஜியார் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவு என்பதால் எதுவும் செய்ய முடியாது எனவும், சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழை சிறை கண்காணிப்பாளரிடம் காண்பித்து தேவையான மருத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளும்படி நீதிபதி மலர்விழி வேலன்டீனா அறிவுறுத்தினார்.