கோவை : கோவை மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.
கோவை : கோவை மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது அவர் கூறியதாவது :- பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு விபரம் கிடைத்தவுடன் மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களின் வீட்டின் சுற்றுப்புறம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் பிளிச்சீங் பவுடன் போடப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் வீட்டையும் 5 சதவீதம் லைஸால் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் நபர்களின் வீட்டின் கதவின் கைப்பிடிகள், மேசை பரப்பு, நாற்காலிகள், மின் ஸ்விட்ச்சுகள், தொலைபேசி போன்றவற்றை தினமும் ஒருமுறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலுள்ள மற்ற அனைத்து நபர்களுக்கும் Tab.tamilflu மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. கைகள் கழுவும் முறைப்பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகள், ரயில்கள், மாடிப்படிகள், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுண்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள ஸ்விட்ச்சுகள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். A(H1N1) கிருமி தொற்று ஏற்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது.
இந்த நீர்த்திவலைகள் படிந்த பொருட்களை தொடும் பொழுது கைகளில் இந்த கிருமி ஒட்டிக்கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, அல்லது வாயைத் தொடும் போது கிருமித் தொற்று ஏற்படுகிறது. எனவே, பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்த பின்னர் கைகளை நன்றாக கழுவ வேண்டும். செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பின்னரும், மாமிசம் உட்கொண்ட பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளுதல் கூடாது. பள்ளி, அலுவலகம், மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக் குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவும், பயன்படுத்திய கைக்குட்டைகள் மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் காலை வணக்க பாடலின் போது கைகளை கழுவும் முறை விளக்கிக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து tamilflu மாத்திரைகள் தேவையான அளவு அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது. மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.