கோவை : கோவை மத்திய சிறையில் மாநகர காவல்துறை சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையர் சுந்தரராஜன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருந்த வீடியோ பதிவு வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவை, திருச்சி, சேலம், வேலூர் போன்ற இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் கடும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணிக்கு கோவை மத்திய சிறையில் சிறைத்துறை உதவி ஆணையாளர் சுந்தரராஜன் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் பெண் போலீசார் சோதனைகள் செய்தனர். இதில், சிறைத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை வழக்கமான சோதனை என தெரிவித்தாலும், பெண் கைதிகளிடம் பிரத்யேக சோதனை நடத்தியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.