கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 தீபாவளி போனஸ்

கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ. 2,000 தீபாவளி போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ. 2,000 தீபாவளி போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் வழங்க பல்வேறு துப்புரவு பணியாளர் நலச்சங்கங்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல்வேறு துப்புரவு பணியாளர் நலச்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில், மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் தீபாவளி போனஸ் வழங்க ஒப்பந்ததாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். வேறு எந்த மாநகராட்சியிலும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் இது போன்று வழங்கப்பட்டதில்லை. கோவை மாநகராட்சியில் தொடர்ந்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இவ்வாண்டும் போனஸ் வழங்கப்படுகிறது.

இதனையொட்டி, பல்வேறு துப்புரவு பணியாளர் நலச்சங்க உறுப்பினர்கள் நன்றியினை தெரிவிக்கும் வகையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோரிடம் நேரில் சந்தித்து நன்றியினைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது, மாநகர நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஸ்குமார் அவர்கள், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமார், மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை ரூ.1,000 ஒப்பந்ததாரர்கள் மூலமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...