கோவையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை மடக்கிப் பிடித்த போலீஸ்

கோவை : கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள பீளமேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சமூக விரோத கும்பல்கள் கஞ்சா விற்பனை செய்து மாணவர் சமுதாயத்தை கெடுத்து வருவதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரணின் உத்தரவின் பேரில் காவல்துறை துணை ஆணையர் சட்டம்-ஒழுங்கு லட்சுமியால் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதில், தனிப்படை போலீசார் நடத்திய பல்வேறு நடவடிக்கைகளில் கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், கஞ்சா விற்பனை எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. கோவைக்கு கடத்திவரப்படும் கஞ்சா பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வந்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் அலுவலகம் அருகே வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து விற்பனை செய்ய வந்த குற்றவாளிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 



இதில், மதுரையைச் சேர்ந்த சக்திவேல் (49), அவரது தங்கை ஈஸ்வரி (44), அசோக் (31), கோவை சிங்காநல்லூர் சேர்ந்த கோகுல கண்ணன் (23), அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் (23), ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு (24), அதேபகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), குனியமுத்தூரைச் சேர்ந்த முஜிப் ரகுமான் ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, முஜிப் ரகுமான் மட்டும் போலீசாரிடமிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், மற்ற ஏழு நபர்களை பிடித்து, அவர்கள் வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அதில், சுமார் 110 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னர், போலீசார் இருசக்கர வாகனம், கார் மற்றும் 110 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அதோடு குற்றவாளிகள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பியோடியவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...