கோவை : சூலூர் அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட கொத்தடிமை குடும்பத்திற்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தும், தமிழக அரசு இன்னும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை என மீட்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்.

திருப்பூர் குமரன் சாலையில் ஐ.ஜே.எம். என்னும் தொண்டு நிறுவனம் மூலம் கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றியும், மீட்டெடுப்பவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றியுமான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2014-ம் ஆண்டு கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது :- கடந்த 2014-ம் ஆண்டு சத்தியமங்கலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் தான் பெற்ற ரூ. 60 ஆயிரம் கடனுக்காக கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள விசைத்தறி ஆலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். அவ்வாறு பணியாற்றும்போது அங்கிருந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்ததால் பாலசுப்பிரமணியத்தின் 6 வயதுடைய மகள் இறந்துவிட்டார். இச்சம்பவத்தையடுத்து, கரும்பத்தம்பட்டி காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர்கள் மேற்கொண்ட விசாரணையில் பாலசுப்பிரமணியம் கடந்த 3 வருடமாக கொத்தடிமையாக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்களை மீட்ட காவல்துறையினர் கொத்தடிமை ஒழிப்புமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ஐ.ஜே.எம். தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று இழப்பீட்டுத் தொகை வழங்க ஜனவரி மாதம் உத்தரவிட்ட நிலையில், இன்னமும் கூட இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என பாலசுப்பிரமணியத்தின் குடும்பம் வேதனை தெரிவித்தது. கூடிய விரைவில் தமிழக அரசு இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.