திருப்பூர் : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் குமரன் கல்லூரியில் அறிவியல் படைப்புகளுக்கான ஆய்வறிக்கையை மாணவர்கள் இன்று சமர்ப்பித்தனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு திருப்பூரில் மத்திய அறிவியல் மன்றம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் இன்று வரை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் அறிவியல் படைப்புகள் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பிரச்சனைக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காணும் வகையிலான படைப்புகளை கண்டுபிடித்தனர். அவற்றில், சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150 குழுக்கள், குழுவுக்கு தலா 2 பேர் வீதம் 300 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை சமர்ப்பித்து, அதற்கான விளக்கம் அளித்தனர். அதன்பின்னர், ஆசிரியர்கள் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து, 15 குழுக்களை மாநில அளவில் நடைபெறவுள்ள அறிவியல் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செல்லத்துரை, மாவட்ட செயலாளர் தினேஷ், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிளிப் தொடங்கி வைத்தார். இதில், திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.