நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை, எளிய மாணவ, மாணவர்களை சுற்றுலாத்துறை சார்பில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை, எளிய மாணவ, மாணவர்கள் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரசு பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை, எளிய மாணவர்களை சுற்றுலாத்துறை மூலம் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு ஆண்டுதோறும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் தூனேரி போன்ற அரசு பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் 150 ஏழை, எளிய மாணவர்களை தேர்வு செய்து ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். உதகையிலுள்ள அரசு அருங்காட்சியகம், அரசு தாவரவியல் பூங்கா, ஆளுநர் மாளிகை, வானொலி ஆராய்ச்சி மையம், படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரிய பழமையான கட்டிடங்களை இந்த விழிப்புணர்வு சுற்றுலா மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.

முன்னதாக, இந்த சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குச் சான்றுகளை வழங்கிக் கவுரவித்தார்.
