நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் யானையைக் கொன்று தந்தம் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேருக்கு குன்னூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

கோத்தகிரி அருகே குஞ்சப்பண்னை பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு காட்டு யானையைக் கொன்று தந்தம் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த குபேந்திரன் மற்றும் சிங்கம் என்பவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், கோத்தகிரி வனசரகர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அவர்கள் இருவரும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இருவரும் குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை குன்னூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.