Exclusive: கிணத்துக்கடவு வட்டாரத்தில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் : வட்டாரக் கல்வி அலுவலர்

கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என வட்டாரக் கல்வி அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.


கோவை : கிணத்துக்கடவு வட்டாரத்தில் இருக்கும் 75 பள்ளிகளில் பயிலும் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என வட்டாரக் கல்வி அலுவலர் ஷர்மிளா தெரிவித்துள்ளார். 

கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு விடுமுறைகள் முடிந்து 2-வது கட்ட தேர்வுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. 

ஆனால், இன்னும் தமிழக அரசின் இலவசப் பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் இருந்து பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். 

குறிப்பாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மட்டும் 75 பள்ளிகளில் சுமார் 5,324 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், 1,088 மாணவர்கள் மட்டும் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். 

"கிணத்துக்கடவு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 75 பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசு மற்றும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது," என சமூக ஆர்வலர் மணி கூறுகின்றார்.

இது தொடர்பாக வட்டாரக் கல்வி அலுவலர் ஷர்மிளாவிடம் கேட்டபோது, "தர்மபுரி, தமிழ்நாடு பாடப்புத்தகக் கழகத்திடம் இருந்து மாவட்ட கல்வி அலுவலகம் பாடப்புத்தகங்களைப் பெற்றுள்ளது. இனி, பள்ளி வாரியாக விநியோகம் செய்யும் பணிகளுக்காக காத்திருக்கிறோம். கிணத்துக்கடவு வட்டாரத்தில் பயிலும் மாணவர்களுக்கு 645 புத்தகங்கள் தேவைப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர்களுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...