கோவை: கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் வசித்து வரும் நாகராஜ்-இரத்தினம் தம்பதியின் மகன் சஞ்சய் (8) என்ற சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் பன்றிக் காய்ச்சலுக்கான பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 12 மணியளவில் சிறுவன் சஞ்சய் உயிரிழந்தார்.
கோவையில் மொத்தம் 57 பேர் காய்ச்சலால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலாலும் 8 பேர் பன்றி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.