தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அரசு ஆலையை மூட வேண்டும் எனக்கூறி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ‘வேதாந்தா’ நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்க ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், மூவர் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை இயங்கிக் கொண்டிருந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட காற்று மாசு பரிசோதனையில் சல்பர்டை ஆக்சைடு 20.0 மைக்ரோகிராம்/க்யூபிக் மீட்டர், நைட்ரஜன் டை ஆக்சைடு 15.0 மைக்ரோ கிராம்/ க்யூபிக் மீட்டர் ஆகும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், குமரெட்டிபுரம், அன்புநகர், வீரபாண்டியபுரம், மீளவிட்டான்புரம் உள்ளிட்ட 8 இடங்களில் காற்றுமாசு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், சல்பர் டைஆக்சைடு 5 மைக்ரோகிராம்/ க்யூபிக்மீட்டர், நைட்ரஜன் டை ஆக்சைடு 7 மைக்ரோகிராம்/ கியூபிக் மீட்டர் மட்டுமே பதிவாகியுள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ெடர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.