தீபாவளி பண்டிகையன்று வடமாநிலங்களில் இரவு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகையன்று வடமாநிலங்களில் இரவு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாசுபாட்டை தடுக்கும் வகையில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், தென் மாநிலங்களுக்கு முக்கிய சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது, காலையில் வெடிப்பதா..?, மாலையில் வெடிப்பதா..?, இரவில் வெடிப்பதா..? என்று முடிவு செய்து கொள்ள முடியும். இரவில் ஒரு மணி நேரம் பகலில் ஒரு மணி நேரம் என்று மாற்றி மாற்றி வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தந்த தென்மாநில அரசுகள் இதற்கான அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது. வடமாநிலங்களில் பொதுவாக மக்கள் ராவணனை ராமன் வதம் செய்ததை நினைவு கூறும் வகையில் இரவில் வெடி வெடிப்பார்கள். ஆனால், தென்னிந்திய மக்கள், குறிப்பாக தமிழர்கள் நரகாசுரனை வதம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அதிகாலையிலேயே வெடி வெடிப்பார்கள். இந்த கலாச்சார வேறுபாட்டை மதிக்கும் வகையில் இந்த சலுகை தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு இந்த நேர தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.