கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் காரமடை தனியார் கல்லூரி ஆகியவை இணைந்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதை மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், நகராட்சியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வந்தடைந்தது.

இதன் பின்னர் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவலுக்கு முக்கிய காரணியாக உள்ள கொசுக்கள் உருவாகும் முறை அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டது.