கோவை: வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கால முறை ஊதியத்திற்கு பதிலாக கால முறை ஊதியமாக வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதியில் இருந்து 27 இரவு வரை சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.