சென்னை : செல்போனை தட்டி விட்ட விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் 'I am very sorry' என்று கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை : செல்போனை தட்டி விட்ட விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் 'I am very sorry' என்று கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் தனியார் கருத்தரிப்பு மைய திறப்பு விழாவிற்கு நேற்று சென்ற நடிகர் சிவக்குமார் அங்கு செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை ஆவேசமாக தட்டிவிட்டார். ஆசையுடன் செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை ஆவேசமாக சிவக்குமார் தட்டிவிட்டதில், செல்போன் உடைந்து சிதறியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி விவாதத்திற்கு உள்ளானது. பலரும் 'மீம்ஸ்' போட்டு சிவக்குமாரை கலாய்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் சிவக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "செல்பி எடுக்க வேண்டுமானால் தொட்டபெட்டா போன்ற இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட ஒருவருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம்." என்றிருந்தார்.
இந்த சூழலில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு திரைப்பட கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் என் செயலுக்காக நான் உளமார வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 'I am very sorry'." என்று அந்த வீடியோவில் பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.