திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலையை அடுத்த போடிபட்டியில் தனியார் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அமராவதி பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த பேருந்து போடிபட்டியில் சாலையில் தேங்காய் உளிக்கும் வேலைக்கு 5 இருசக்கர வாகனங்களில் சென்ற 10 தொழிலாளர்கள் மீது மோதியது.

இதில் குறிச்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (20), ராமேயகவுண்டன்புதூரை சேர்ந்த குமரேசன் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் உடுமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், சின்னமாறன் (50) என்பவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பேருந்து அதிவேகமாகச் சென்றதன் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.