திருப்பூர் : திருப்பூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பலவஞ்சிபாளையம் வஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (48). கடந்த 2017-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த வழக்கின் அடிப்படையில் போலீசார் கடந்தாண்டு நவம்பர் மாதம் சுப்பிரமணியை கைது செய்தனர்.

இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுப்பிரமணி கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.