நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கன்னி மாரியம்மன் கோவில் பகுதியில் இரவு நேரத்தில் காட்டெருமை தாக்கியதில் 50 வயது மதிக்கத்தக்க ஆனந்த் என்பவர் படுகாயமடைந்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கன்னி மாரியம்மன் கோவில் பகுதியில் இரவு நேரத்தில் காட்டெருமை தாக்கியதில் 50 வயது மதிக்கத்தக்க ஆனந்த் என்பவர் படுகாயமடைந்தார்.
குன்னூர் அருகே உள்ள கன்னி மாரியம்மன் கோயில் பகுதியில் சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்த ஆனந்த் என்பவரை காட்டெருமை பலமாக தாக்கியது. இதில் வயிறு, தலை, கை, காலில் பலத்த காயம் அடைந்த ஆனந்த் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உலா வரும் வன விலங்குகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்திட வேண்டும் என்று வனத் துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.