கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேலும் 3 விமானங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேலும் 3 விமானங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கோவை கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிஐஐ கோவை, சீமா, கொடிசியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், எரிபொருள் சலுகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் மேலும் 3 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது. இந்த விமானங்கள் சுமார் 3 மணிநேரம் கோவை விமான நிலையத்தில் தங்குகின்றன.
1) ஜெட் ஏர்வேஸ் எண் 9W 993 விமானம், நள்ளிரவு 12.05 மணிக்கு டெல்லியில் இருந்து கோவை வந்தடைகிறது. பின்னர், அதிகாலை மீண்டும் 05.50 மணிக்கு டெல்லிக்குப் புறப்படுகிறது.
2) ஜெட் ஏர்வேஸ் எண் 9W 649 விமானம், நள்ளிரவு 09.50 மணிக்கு பெங்களூரூவில் இருந்து கோவை வந்தடைகிறது. பின்னர், அதிகாலை மீண்டும் 05.30 மணிக்கு பெங்களூரூவுக்கு புறப்படுகிறது.
3) ஜெட் ஏர்வேஸ் எண் 9W 977 விமானம், நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவை வந்தடைகிறது. பின்னர், அதிகாலை மீண்டும் 06.55 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது.