திருப்பூர் : கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது பொக்லைன் இயந்திரம் மோதிய விபத்தில் து. லாரியின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரணம்பேட்டை பகுதியில் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே ஒருவழிச்சாலையில் வந்த பொக்லைன் இயந்திரம் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சரக்கு லாரியின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் தனியாக ஓடின. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்ததுடன், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.