திருப்பூர் : இணையான ஊதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் திருப்பூரில் பேரணி நடைபெற்றது.

திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை அமைப்பின் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இந்தப் பேரணியில் மாநில பொருளாளர் பாக்கியம் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ரூ.19,500, உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும், பணிக்கொடை வழங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.
திருப்பூர், தென்னம்பாளையம் முதல் புதிய ஆட்சியர் அலுவலகம் வரை பல்லடம் மெயின் ரோட்டில் பேரணியாக சென்று, பின்பு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனுவாக அளித்தனர்.