கோவை : ஐ.சி.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட 'டேர் டூ ட்ரீம்' விருது வழங்கும் விழாவில், கோவை மாவட்டத்தில் தலைநிறந்த தயாரிப்பு நிறுவனமாக ரூட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை : ஐ.சி.சி.ஐ. சார்பில் நடத்தப்பட்ட 'டேர் டூ ட்ரீம்' விருது வழங்கும் விழாவில், கோவை மாவட்டத்தில் தலைநிறந்த தயாரிப்பு நிறுவனமாக ரூட்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த எம்.என்.சி., நிறுவனமான சாப் (SAP) இணைந்து இந்த விழாவை நடத்தின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான சிறந்த நிறுவனமாக ரூட்ஸ் நிறுவனமும், எம்ர்ஜிங் நிறுவனமாக பிரிக்காலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த டெக்ஸ்டைல் நிறுவனமாக சாரதா டெரி புராடெக்ட்ஸ் லிமிடெட்டும், சிறந்த கல்வி நிறுவனமாக பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனமும் தேர்வாகியது.
இதேபோல, மருத்துவத்துறையில் கோவை மெடிக்கல் சென்டரும், ஏற்றுமதியில் எமரால்டு நிறுவனமும், கார்ப்பரேசன் சிட்டிசன் விருது சிறுதுளி அமைப்பிற்கு வழங்கப்பட்டது.