கோவை : பந்தயசாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் இன்று அதிகாலை சந்தன மரத்தை வெட்டிய இளைஞரை போலீசார் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

கோவை பந்தய சாலையில் மாவட்ட நீதிபதிகளின் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள வளாகத்தில் சந்தன மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் இருக்கின்றன. இங்கு அடிக்கடி மர்ம நபர்களால் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. ஆகவே, போலீசார் வீடுகள் மற்றும் சாலையோரங்கள், அரசு அலுவலகங்களில் வளர்ந்துள்ள சந்தன மரங்களை குறிவைத்து வெட்டி கடத்தும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நீதிபதிகள் குடியிருப்பில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, மரம் வெட்டும் சத்தத்தை கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் ஒருவர் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். பின்னர், ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து அந்த இளைஞரை ஒப்படைத்தார். அப்போது, மரத்தை வெட்டப் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தேனி மாவட்டம், கூடலூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த வினோத்குமார் (29) என்பது தெரியவந்தது. இவர், மீது ஏற்கனவே தேனி மாவட்டத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்கு முன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சந்தனமரங்களை வெட்டிக் கடத்திய சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதோடு, சந்தன மரங்களை வெட்டி கடத்த இவருக்கு துணையாய் இருப்பவர்கள் யார் யார் எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.